வீட்டு உள்அலங்காரத்தில் முக்கியமான அம்சமாக சுவர் அலங்காரத்தைச் சொல்லலாம். அந்தச் சுவர் அலங்காரத்தை எளிமையாகவும், அசத்தலாகவும் செய்வதற்கு வால்பேப்பர்கள் (wallpapers) உதவுகின்றன.
வால்பேப்பர்கள் வீடுகளுக்கு நவீனத் தோற்றத்தை எளிதாக வழங்குகிறது. தற்போது இந்த வால்பேப்பர்கள் பலவகைகளில் கிடைகின்றன. உங்களுடைய வீட்டின் தன்மைக்கேற்றபடி அழகு, கலைநயம், புதுமை, தனிநபர் ரசனை, பட்ஜெட் என எல்லா அம்சங்களையும் அலசி ஆராய்ந்து, நமக்குப் பொருத்தமான வால்பேப்பர்களைத் தேர்ந்தெடுக்க முடியும்.
நவீனத்துடன் வீட்டில் வசிப்பவர்களின் ஆளுமையை வெளிப்படுத்துவதிலும் இந்த வால்பேப்பர்கள் பெரிய பங்குவகிக்கின்றன. ஒவ்வொரு குடும்பத்திலும் சொல்வதற்கு ஒரு கதை இருக்கும். அந்தக் கதையை வால்பேப்பர்கள் வழியாக நவீன மொழியில் சொல்வதும் இப்போது புதிய பாணியாக இருக்கிறது.
இதில் சொந்த வீட்டில் இருப்பவர்களுக்கு ‘வினைல்’ வால் பேப்பர் ஏற்றது. ஏனென்றால் இந்த வகை 4 முதல் 5 ஆண்டுகள் வரை உழைக்கும். பத்துக்குப் பத்து சதுர அடிக்கு இந்த வினைல் வால்பேப்பரைப் பயன்படுத்தினால் சுமார் 5000 ரூபாய் வரை செலவாகும். Contact +917397153090

