மாஸ்கிங் டேப்பை பயன்படுத்தி சுவருக்கு இப்படி செல்ஃப்- கிரியேட் டிசைனுடன் பெயிண்ட் செய்துள்ளேன்.
இந்த வேலையில் மாஸ்கிங் டேப்பை சரியாக ஒட்டி பெயிண்ட் கசியாமல் இருப்பது மிக முக்கியம். நான் உருவாக்கிய இந்த கட்டங்கள் அனைத்தும் ஒரே அளவிலும் சரியான இடைவெளியிலும் இருப்பது வேலையின் துல்லியத்தை காட்டுகிறது.
இந்த அடர் பச்சை நிறம் (indigo paints) கண்களுக்கு மிகவும் நவீனமாகவும், குளிர்ச்சியாகவும் இருக்கிறது. அதனுடன் இணைந்த வெள்ளை நிற வரிகள் இந்த அடர் பச்சையுடன் இணைந்து ஒரு சிறப்பான மற்றும் ஒரு ஸ்டைலிஷ் ஆன தோற்றத்தை தருகிறது.
இந்தத் தோற்றம் படுக்கையறைக்கு ஏற்றதாக மட்டுமில்லாமல், நேர்த்தியாகவும், துல்லியமாகவும் இருக்கிறது.
இந்த முயற்சிக்கு சிந்தனையைப் போல, பொறுமையும் மிக முக்கியம். அப்போதுதான் வீட்டின் சுவர்களுக்கு உயிரோட்டத்தை கொடுக்க முடியும். Aahazack
