சேலம் மாவட்டம், கெங்கவல்லியில் எனது உடன்பிறந்த சகோதரியின் வீட்டில் உள்ள சுவர்களில் மாஸ்கிங் டேப்பைப் பயன்படுத்தி பல்வேறு வகையான வடிவ அலங்காரங்களில் பெயிண்டிங் செய்துள்ளேன்.
இந்த அலங்காரத்திற்கு ஆங்கிலத்தில் ஜியோமெட்ரிக் டிசைன் என்று சொல்வார்கள். இந்த முறையைப் பயன்படுத்தி மாஸ்கிங் டேப் உதவியுடன் செங்குத்து நேர்கோடு, முக்கோணங்கள், சதுரங்கள் போன்ற வடிவங்களை சுவர்களில் உருவாக்கினேன்.
இது சுவர்களுக்கு நவீனமான கலைநயமிக்க மற்றும் நேர்த்தியான தோற்றத்தை கொடுத்தது மட்டுமில்லாமல், இது வாடிக்கையாளர்களின் மனதையும் கவர்ந்துள்ளது.




